சிறுவர் துஷ்பிரயோகம்

Help Us Spread the Word!

சிறுவர் துஷ்பிரயோகம் என்பது ஒரு பெற்றோர், பராமரிப்பாளர் அல்லது நம்பிக்கைக்குரிய ஒரு நபரால் சிறுவருக்கு தீங்கு, சாத்தியமான தீங்கு அல்லது தீங்கு விளைவிக்கும் அச்சுறுத்தலுக்கு வழிவகுக்கும் எந்தவொரு செயலையும் அல்லது சிறுவருக்கான தேவைகளை நிறைவேற்றாது கவனிக்காமல் விடுதலையும் குறிக்கின்றது. இது உடல் ரீதியான துஷ்பிரயோகம், உணர்ச்சி ரீதியான துஷ்பிரயோகம், பாலியல் துஷ்பிரயோகம், புறக்கணிப்பு மற்றும் சுரண்டல் உள்ளிட்ட பல்வேறு வடிவங்களில் நடைபெறலாம். குறித்த துஷ்பிரயோகங்களிலிருந்து சிறுவர்களைப் பாதுகாக்க இலங்கை உட்ப்பட்ட பல நாடுகளில் முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது.

இலங்கையில் சிறுவர் துஷ்பிரயோகங்கள் தொடர்பான சட்டங்கள்

இலங்கையில் சிறுவர் பாதுகாப்பு தொடர்பில் பல சட்டங்கள் மற்றும் ஒழுங்குவிதிமுறைகள் காணப்படுகின்றன. சிறுவர் பாதுகாப்பு தொடர்பான சில முக்கிய சட்டங்கள் பின்வருமாறு காணப்படுகின்றது.

  • 1939ம் ஆண்டின் சிறுவர் மற்றும் இளம் ஆட்கள் கட்டளைச் சட்டம்
  • 1950ம் ஆண்டின் 47ஆம் இலக்க பெண்களையும், இளம் ஆட்களையும், பிள்ளைகளையும் தொழிலுக்கமர்த்தல் சட்டம்

மேற்குறிப்பிடப்பட்ட சட்டங்களின்படி 14 வயத்திற்குட்பட்ட நபர்கள் சிறுவர்கள் என வரையறுக்கப்பட்டுள்ளார்கள்.

சிறுவர் துஷ்பிரயோகத்தைத் தடுப்பதற்கும், சிறுவர் துஷ்பிரயோக குற்றவாளிகளுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுப்பதற்கும் பயன்படுத்தப்படும் முக்கிய ஆதரமாக தண்டனைச் சட்டக்கோவை காணப்படுகின்றது.

1995ஆம் ஆண்டின் 22ஆம் இலக்க சட்டத்தால் திருத்தப்பட்டவாறான தண்டனைச் சட்டக்கோவை

இச்சட்டத்தில் உள்ள சிறப்பு என்னவெனில் சிறுவர் துஷ்பிரயோகம் சம்மந்தமான குற்றங்கள் பற்றி குறிப்பிடப்படுவதுடன் குறித்த குற்றத்தில் ஈடுபடும் நபர்களுக்கான குறைந்தபட்ச தண்டனைகள் மற்றும் அதிகபட்ச தண்டனைகள் பற்றியும் வரையறை செய்யப்பட்டுள்ளது. இச்சட்டத்தின் கீழ் சிறுவரைக் கொடுமைப்படுத்தல், சிறுவரை பாலியல் ரீதியாக சுரண்டுதல், சிறுவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்தல், சிறுவரை மோசமான முறையில் காட்சிப்படுத்தல் அல்லது அவ்வாறு வெளியீடு செய்தல், அத்தகைய வெளியீடுகளை வைத்திருத்தல், விற்பனை செய்தல், விநயோகம் செய்தல் போன்றவையும் மேலும் அவ்வாறான செயற்பாடுகளுக்கு உதவுதலும் தண்டனைக்குரிய குற்றமாக வரையறை செய்யப்பட்டுள்ளது.

1995ஆம் ஆண்டின் 29ஆம் இலக்க சட்டத்தால் திருத்தப்பட்டவாறான தண்டனைச் சட்டக்கோவை

இச்சட்டத்தில் 18 வயதிற்குட்பட்ட சிறுவர்களை வேலைக்கு அமர்த்துவது கடுமையான குற்றமாக வரையறுக்கப்பட்டுள்ளது என்பதுடன் பின்வரும் குற்றங்களுக்கான தண்டனைகளையும் குறிக்கின்றது.
பிச்சை எடுப்பதற்கு குழந்தைகளைப் பயன்படுத்தல், பாலியல் சுரண்டலுக்கு அல்லது விபச்சாரத்திற்கு சிறுவர்களை பணியமர்த்தல், நச்சுப்பொருட்கள், அபின், அபாயகரமான ஒளடதங்கள் போன்ற தடைசெய்யப்பட்ட பொருட்களை கொண்டுசெல்வதற்கு சிறுவர்களைப் பயன்படுத்தல் போன்ற குற்றங்களுக்கான தண்டனைகளும் இச்சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சிறுவர்கள் துஷ்பிரயோகம் செய்யப்படுவதற்கான வழிகள்

சிறுவர் துஷ்பிரயோகம் பல்வேறு வடிவங்களில் வெளிப்படலாம், அவற்றுள் பின்வருவன அடங்கும்.

உடல் ரீதியான துஷ்பிரயோகம்: ஒரு சிறுவருக்கு உடல் ரீதியான தீங்கு அல்லது காயத்தை ஏற்ப்படுத்தல்.

யாராவது தெரிந்தே ஒரு சிறுவருக்கு தீங்கு விளைவிக்கும் போது அல்லது உடல் ரீதியாக ஆபத்தை ஏற்ப்படுத்தும் போது அச்சிறுவருக்கு உடல் ரீதியான துஷ்பிரயோகம் ஏற்படுகின்றது. உடல் ரீதியான துஷ்பிரயோகம் எப்போதும் காணக்கூடிய அடையாளத்தையோ அல்லது காயத்தினையோ மட்டும் ஏற்ப்படுத்துவதில்லை. உடல் ரீதியான துஷ்பிரயோகத்தில் சிறுவரை அடித்தல், அசைப்பது, எறிதல், எரித்தல், நீரில் அமிழ்த்துவது, மூச்சுதிணறல் அல்லது உடல் ரீதியாக தீங்கு விளைவித்தல் ஆகியவை அடங்கும்.

உளரீதியான துஷ்பிரயோகம்:

தொடச்சியான விமர்சனம் அல்லது அவமானம் போன்ற உணர்ச்சி அல்லது உளவியல் ரீதியான தீங்கை ஏற்ப்படுத்தல் உளரீதியான துஷ்பிரயோகமாக கருதப்படுகின்றது. ஒரு பிள்ளைக்கு இவ்வாறான சம்பவங்கள் நடக்கும் போது அவர்களின் சமூக உணர்ச்சி அல்லது அறிவுசார் வளர்ச்சி எதிர்மறையாக பாதிக்கும் போது இவ் உளரீதியான துஷ்பிரயோகம் ஏற்படுகின்றது.

பாலியல் துஷ்பிரயோகம்:

பொருத்தமற்ற அல்லது புரிந்துணர்வற்ற பாலியற் செயல்களில் சிறுவரை ஈடுபடுத்தல் அல்லது சுரண்டுதல்.


சிறுவர் பாலியல் துஷ்பிரயோகம் என்பது ஒரு வயது வந்தவர், இளம் நபர் அல்லது சிறுவர் தங்கள் அதிகாரத்தைளோ அல்லது பலத்தையோ பயன்படுத்தி மற்றொரு சிறுவரை பாலியல் செயலில் பங்கேற்க கட்டாயப்படுத்தும் போதோ அல்லது தூண்டும் போதோ குறித்த பாலியல் துஷ்பிரயோகம் நிகழ்கின்றது.

கவனியாது விடல்

ஒரு சிறுவரின் நல்வாழ்வுக்கு தேவையான கவனிப்பு, மேற்பார்வை அல்லது ஆதரவை வழங்கத் தவறுவது. அதாவது ஒரு சிறுவரின் அடிப்படைத் தேவைகள் புறக்கணிக்கப்பட்டு அவர்களின் வளர்ச்சி புறக்கணிக்கப்படும் போது கவனையின்மை ஏற்படுகின்றது.

சுரண்டுதல்

உழைப்பு, கடத்தல் அல்லது வேறு எந்த விதமான நியாயமற்ற சுரண்டலுக்கும் சிறுவரைப் பயன்படுத்தல்.

இலங்கையில் சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பில் புகாரளித்தல்

இக்கட்டுரையானது முக்கியமாக குழந்தைகளுக்கு எதிரான உடல் ரீதயான துஷ்பிரயோகம் மற்றும் அதன் தற்போதைய சட்டநிலை குறித்து கவனம் செலுத்துகின்றது.

தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைச் சட்டம்

இது சிறுவர் துஷ்பிரயோகத்தை தடுப்பது மற்றும் துஷ்பிரயோகத்தால் பாதிக்கப்பட்ட சிறுவரின் பாதுகாப்பு மற்றும் சிகிச்சைக்காக தேசிய வழிகாட்டுதல்களை உருவாக்குவது மற்றும் துஷ்பிரயோகத்தில் ஈடுபடும் அனைத்து நபர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்தல், ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு ஆகியவற்றைக் கையாள்கின்றது.

இலங்கையில் சிறுவர் துஷ்பிரயோகம் நடைபெறுகின்றது என சந்தேகித்தால் அல்லது கண்டால் நீங்கள் அதை சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்கு தெரியப்படுத்தலாம். குறிப்பிட்ட அதிகாரசபையானது சிறுவர் பாதுகாப்பிற்கு பொறுப்பான முதன்மை அரசாங்க நிறுவனமாக திகழ்கின்றது.

சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபைக்கு சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பில் புகாரளிப்பதற்கான தொடர்பு விபரங்கள் பின்வருமாறு.

தேசிய பாதுகாப்பு அதிகாரசபை:

ஹட் லைன் சேவை: 1929

மின்னஞ்சல் : hழவாநடி;உhடைனிசழவநஉவழைn.பழஎ.டம

அதற்கு மேலதிகமாக சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பில் அருகிலுள்ள காவல் நிலையம், குழந்தைகள் நல அமைப்புகள் அல்லது சமூகசேவைகளுக்கு சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பில் புகாரளிக்கலாம். துஷ்பிரயோகத்தால் பாதிக்கப்பட்ட சிறுவரை பாதுகாக்க உடனடி நடவடிக்கை எடுப்பதும், பொருத்தமான அதிகாரிகள் குறிப்பிட்ட விடயம் தொடர்பில் விசாரிப்பதை உறுதி செய்வதும் இங்கு மிகவும் முக்கியமான விடயமாக காணப்படுகின்றது.

சிறுவர் துஷ்பிரயோகத்தை புகாரளிப்பதற்கான நிறுவனங்கள்

  • பொலிஸ் பெண்கள் சிறுவர் பிரிவு பணிமனை
  • தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை

இந்த கட்டளைகள் மற்றும் சட்டங்கள் அனைத்தும் ஒரு குழந்தையின் பாதுகாப்பை உறுதி செய்கின்றன.

Source: Women In Need


Help Us Spread the Word!

ප්‍රතිචාරයක් ලබාදෙන්න

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *