யாராவது உங்களை மிரட்டினால் அல்லது தாக்கினால் என்ன செய்வீர்கள்?

Help Us Spread the Word!

யாராவது உங்களை அச்சுறுத்தும் போது அந்நேரத்தில் நீங்கள் பயமாகவும் மன அழுத்தமாகவும் உணரலாம். அச்சுறுத்தல்களுக்கு எவ்வாறு பதிலளிப்பது மற்றும் அதிலிருந்து உங்களை எவ்வாறு பாதுகாத்துக் கொள்வது என அறிவது முக்கியமானதாகும்.

நீங்கள் எடுக்கக்கூடிய நடவடிக்கைகள் குறித்த அச்சுறுத்தல்களுக்கு எவ்வாறு புகாரளிப்பது மற்றும் அதற்கு எவ்வாறு உதவி பெறுவது என்பது பற்றி தெரிந்துகொள்வது என்றோ ஒருநாள் உங்களுக்கு உதவியாக இருக்கும்.

அச்சுறுத்தல்களின் வகைகள்

  • உங்களுக்கு அல்லது உங்கள் சொத்துக்களுக்கு எவ்வாறு தீங்கு விளைவிப்பது என்று யாராவது உங்களுக்கு கூறுவதோ அல்லது காட்டுவதோ அச்சுறுத்தலாகும். இதில் உடல் அல்லது உணர்ச்சி ரீதியான தீங்கு, உங்கள் உடமைகளுக்கு சேதம் விளைவித்தல், அவமானப்படுத்தல், உங்களை அச்சுறுத்தும் முயற்சிகளில் ஈடுபடல் அல்லது துஷ்பிரயோகம் செய்தல் ஆகியவை அடங்கும். பல்வேறுபட்ட அச்சுறுத்தல்களும் அவற்றுக்கு பதிலளிக்கும் வழிகளும் உள்ளன.
  • உங்களுக்கு அருகிலுள்ள நபரொருவர் உங்களுக்கு தீங்கு செய்ய முற்படும் போது அச்சுறுத்தல் ஏற்ப்படுகின்றது.
  • தொலைபேசி மூலம் அச்சுறுத்தல் விடுக்கப்படுகின்றது. சில நேரங்களில் தொலைபேசியில் செய்யப்படும் அச்சுறுத்தல்கள் குறும்பு ‘‘அழைப்புகள்” ஆக இருக்கலாம். அவ்வாறான சந்தர்ப்பங்களில் அச்சுறுத்தல்கள் உண்மையானது அல்ல. எனினும் அவ்வழைப்பானது குறும்பு அழைப்பு என உங்களுக்கு உறுதியானதாக தெரியவில்லை எனின் அதனை உண்மையானதாகக் கருதுவது பெரும்பாலும் சிறந்தது.
  • மின்னணு செய்தி மூலம் வரும் அச்சுறுத்தல்கள் பொதுவாக குறுஞ்செய்தி, சமூக ஊடகங்கள் அல்லது மின்னஞ்சல் மூலம் பெறப்படுகின்றது.
  • வெறுப்பு உணர்வு மூலமான குற்றங்கள் என்பது உங்கள் இனம், மதம், தேசிய தோற்றம் அல்லது பிற அடையாளங்களுடன் தொடர்புடைய அச்சுறுத்தல்கள் ஆகும்.

அச்சுறுத்தலுக்கு எவ்வாறு பதிலளிப்பது.

நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்பது அச்சுறுத்தலின் வகை மற்றும் அச்சுறுத்தல் எவ்வளவு தீவிரமானது என்பதைப் பொறுத்தது.

நீங்கள் நேரில் அச்சுறுத்தப்படுகின்றீர்கள் என்றால்,

  • உங்களைப் பாதுகாப்பது மிகவும் முக்கியமானதாகும். விரைவாக சுற்றிப்பார்த்து பாதுகாப்பான ஒரு இடத்தை கண்டறியவும். குறிப்பிட்ட இடமானது மக்கள் இருக்கும் பரபரப்பான இடமாகவோ அல்லது நீங்கள் மறையக்கூடிய இடமாகவோ இருக்கலாம்.
  • ஆமைதியாக இருங்கள். உங்களை அச்சுறுத்தும் நபருடன் பேசுவதோ அல்லது அவரை நேரில் பார்ப்பதனையோ தவிர்க்கவும். நடுநிலை உடல்மொழியை வைத்திருங்கள் அத்துடன் அவ்விடத்திலிருந்து விரைவாக ஓடவும் அல்லது பின்வாங்கவும் ஆயத்தமாக இருங்கள்.
  • அவசர உதவிக்கு 119 என்ற இலக்கத்திற்கு தொலைபேசி அழைப்பினை ஏற்ப்படுத்துங்கள்.
  • உங்களை சுற்றி இருப்பவர்களின் உதவியை நாடுங்கள்.
  • நீங்கள் மறைந்திருக்கும் போது தொலைபேசியினை அமைதியாக வைத்திருங்கள். அதே நேரம் தொலைபேசியில் கவனம் செலுத்துங்கள்.
  • நிகழ்வு பற்றிய விவரங்களைக் குறிப்பிட முயற்சிக்கவும். புகைப்படங்கள் அல்லது வீடியோக்களை எடுப்பது பாதுகாப்பானது எனின் எடுக்கவும் அல்லது உங்களுக்கு அருகிலுள்ள யாரிடமாவது கேட்கவும். உங்களை அச்சுறுத்தும் நபர் யார் என்று உங்களுக்குத் தெரியாவிட்டால், அந்த நபரை அடையாளம் காண உதவும் விஷயங்களான அவர்களின் வயது, பாலினம், இனம், உயரம், எடை, முடி மற்றும் கண் நிறம், ஆடை மற்றும் அக்குறிப்பிட்ட பருக்குரிய தனித்துவமான விடயம் வேறு எதையும் பாருங்கள்.
  • உங்கள் உயிருக்கு உடனடியான ஆபத்து இருக்கும்போது மட்டுமே கடைசி முயற்சியாக எதிர்த்துப் போராடுங்கள்.
  • குறிப்பிட்ட அச்சுறுத்தலை சட்டஅமுலாக்கல் அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தவும்.

தொலைபேசியிலோ அல்லது ஒரு செய்தியிலோ நீங்கள் அச்சுறுத்தப்படுகின்றீர்கள் என்றால்,

  • அமைதியாக இருங்கள், தொலைபேசியை நிறுத்த வேண்டாம். உங்களை அச்சுறுத்தும் நபரைப் பற்றிய கூடுதல் தகவல்களைப் பெற முயற்சிக்கவும். குறித்த அச்சுறுத்தல் உண்மையானதா என்பதனை அறிய உங்களுக்கு உதவக்கூடிய கேள்விகளைக் கேளுங்கள்.
  • செய்திகள், சமூக ஊடக பதிவுகள் அல்லது மின்னஞ்சல்களுக்கு பதிலளிக்க வேண்டாம்.
  • தகவல்களை சேமிக்கவும். அனுப்பப்பட்ட செய்திகளை வைத்திருங்கள் மற்றும் அச்செய்தி அனுப்பப்பட்ட தொலைபேசி எண் அல்லது மின்னஞ்சல் முகவரியை குறித்து வைத்துக்கொள்ளளுங்கள். முடிந்தால் குறித்த தொலைபேசி அழைப்பை பதிவுசெய்யுங்கள் அல்லது குறிப்பாக என்ன சொல்லப்பட்டது என்பதனை குறித்து வைத்துக்கொள்ளுங்கள்.
  • குறிப்பிட்ட அச்சுறுத்தலை சட்டஅமுலாக்கல் அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தவும்.

இப்படியான அச்சுறுத்தல்களை நீங்கள் எதிர்கொள்ளும் பொழுது உணர்வுபூர்வமான ஆதரவினை கண்டுபிடிக்க முயற்சிசெய்யவும். இப்பிரச்சினை தொடர்பில் நம்பகத்தன்மையான குடும்ப உறுப்பினர், நண்பர், சமூகக்குழு அல்லது சுகாதார வழங்குனரிடம் பேசுங்கள்

யாராவது அச்சுறுத்தலுக்கு ஆளாகியிருப்பதனை நீங்கள் கண்டால்,

  • அவ்விடத்தில் நீங்கள் பாதுகாப்பாக இருந்தால், குறிப்பிட்ட அச்சுறுத்துபவருடன் பேசுங்கள் அல்லது குறித்த சம்பவத்தினை பதிவுசெய்யுங்கள்.
  • அச்சுறுத்தலால் பாதிக்கப்பட்டவர் உடனடி ஆபத்தில் இருந்தால் 119 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பினை ஏற்ப்படுத்துங்கள்.
  • பாதிக்கப்பட்டவரிடம் பேசுங்கள். அவர்களுக்கு உதவ முன்வருவதுடன் குறித்த பாதிக்கப்பட்ட நபருக்கு எவ்வாறு உதவமுடியும் என்று கேளுங்கள். ஆனால் எந்தவொரு நடவடிக்கையும் எடுப்பதற்கு முன்னர் அக்குறிப்பிட்ட பாதிக்கப்பட்டவரின் விருப்பங்களினைக் கேளுங்கள்.
  • பாதிக்கப்பட்ட நபரை அவ்விடத்திலிருந்து வெளியேறுவதற்கான வாய்ப்பினை ஏற்படுத்துங்கள்.
  • அச்சுறுத்தலுக்கு பின்னரும் குறிப்பிட்ட பாதிக்கப்பட்ட நபருக்கு ஆதரவு தேவைப்பட்டால் பாதிக்கப்பட்ட நபருடன் இருங்கள்.

அச்சுறுத்தல் சம்பவங்கள் நடைபெறும் வேளையில் எப்போதும் புகாரளிப்பதற்கு முயற்சிசெய்யவும். அதுபோன்ற குற்றங்களை தடுப்பது உங்கள் சமூக சேவையாக இருக்கும்.

Source : Women In Need


Help Us Spread the Word!

ප්‍රතිචාරයක් ලබාදෙන්න

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *