பாலியல் துஷ்பிரயோகம்
எளிமையான முறையில் சொல்வதானால் பாலியல் துஷ்பிரயோகம் எனப்படுவது ஒரு நபர் இன்னொருவரின் சம்மதம் இன்றி மேற்கொள்கொள்ளும் பாலியல் துர்நடத்தை ஆகும். பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பான சட்டம் 1995 ஆம் ஆண்டு 22 ஆம் இலக்க தண்டனைச் சட்ட கோவைக்கான திருத்தச் சட்டம் மூலமாக அறிமுகப்படுத்தப்பட்டது. இத்திருத்தச் சட்ட பிரிவு 365 (ஆ) மூலம் கடுமையான பாலியல் துஷ்பிரயோகம் என்பது குற்றவியல் குற்றமொன்றாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மேற்கூறப்பட்ட பிரிவிற்கமைய கடுமையான பாலியல் துஷ்பிரயோகம் என்பது பாலியல் திருப்தியை பெற்றுக்கொள்ளும் நோக்கத்திற்காக பிறப்புறுப்பை பயன்படுத்தி அல்லது உடலின் மற்ற பகுதி அல்லது ஏதாவதொரு சாதனம் அல்லது மற்றொரு நபரின் உடலின் ஏதேனும் திறந்த பகுதி அல்லது அந்த நபரின் உடலின் எந்தவொரு பாகத்தின் மூலமும் செய்யப்படும் எந்தவொரு பாலியல் செயலாகும்.
மேற்கூறப்பட்ட பாலியல் செயல் பின்வரும் சூழ்நிலைகளின் கீழ் செய்யப்படலாம்,
- மற்றவரின் சம்மதம் இன்றி அல்லது
- பலத்தை பயன்படுத்துவதன் மூலம் அல்லது
- மிரட்டல் மூலம் அல்லது
- மற்ற நபருக்கு மரண பயம் அல்லது காயத்தை ஏற்படுத்துவதன் மூலம் அல்லது
- மற்ற நபர் சட்டவிரோதமாக தடுத்து வைக்கப்படும் போது பெறப்படும் சம்மதத்துடன் அல்லது
- மற்ற நபர் சுயநினைவின்றி இருக்கும் போது பெறப்படும் சம்மதத்துடன் அல்லது
- மற்ற நபர் மது அல்லது போதைப்பொருளின் செல்வாக்கின் கீழ் இருக்கும் போது பெறப்படும் சம்மதம்
தண்டணைச் சட்டக்கோவையின் பிரிவு 363 இன் கீழ் கற்பழிப்பு தொடர்பான குற்றத்தை நிறுவ ஊடுருவல் அவசியம். ஊடுருவலை நிறுவ ஆண்குறி ஒரு பெண்ணின் பிறப்புறுப்பிற்குள் உட்செலு;தப்பட்டிருக்க வேண்டும். அத்தகைய ஊடுருவல் இன்றிய எந்தவொரு பாலியல் செயலும் கடுமையான பாலியல் துஷ்பிரயோகம் ஆகும்.
குற்றத்திற்கான தண்டனை
கடுமையான பாலியல் துஷ்பிரயோகத்தில் ஈடுபட்ட நபரொருவர் 07 வருடங்களுக்கு குறையாத மற்றும் 20 வருடங்களுக்கு மேற்படாத கடுமையான சிறைத்தண்டனை மற்றும் அபராதுடன் தண்டிக்கப்படுவார்.
மேலும் பாலியல் துஷ்பிரயோகத்தினால் பாதிக்கப்பட்டவர் அக்குற்றத்தை செய்த நபரிடமிருந்து நீதிமன்றத்தினால் தீர்மானிக்கப்படும் இழப்பீட்டு தொகையை பெற்றுத்கொள்ளவதற்கு உரித்துடையவராவார்.
இவற்றுக்கு மேலதிகமாக 18 வயதுக்கு குறைந்த நபருக்கு கடுமையான பாலியல் துஷ்பிரயோகம் செய்யும் எந்தவொரு நபரும், 10 வருடங்களுக்கு குறையாத மற்றும் 20 வருடங்களுக்கு மேற்படாத கடுமையான சிறைத்தண்டனை மற்றும் அபராதத்துடன் தண்டிக்கப்படுவார் மற்றும் நீதிமன்றம் குற்றம் சாட்டப்பட்டவருக்கு பாலியல் துஷ்பிரயோகத்தினால் பாதிக்கப்பட்டவருக்கு இழப்பீடு வழங்குமாறு உத்தரவிடலாம்.
இன்று சமூகத்தில் பாலியல் துஷ்பிரயோகத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் பலர் இருந்த போதிலும் வெட்கம், பயம், சில சமூக அணுகுமுறைகள் மற்றும் புறக்கணிப்பு போன்ற பல்வேறு காரணங்களுக்காக அத்தகைய சம்பவங்கள் பதிவாகவில்லை.
அத்தகைய சம்பவத்தினால் பாதிக்கப்பட்டவர் பின்வரும் இடங்கள் மற்றும் அமைப்புக்களிடமிருந்து உதவியை பெறலாம்.
- இலங்கை பொலிஸ் – 119
- இலங்கை பொலிஸ் சிறுவர் மற்றும் பெண்கள் பணியகம் – 011 2444444
- பெண்கள் உதவி சேவை – 1938
- தேசிய மனநல உதவிச்சேவை – 1926
- தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை – 1929
- சட்ட சேவை தேவைப்படும் பெண்கள் – 076 8686555
- சட்ட ஆலோசனை தேவைப்படும் பெண்கள் – 077 5676555
Source: Women In Need