Breast Cancer Awareness

உங்களுக்குத் தெரியுமா?

இலங்கையில் தினசரி 15 பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய் கண்டறியப்படுகிறது.

தினசரி 3 பெண்கள் மார்பகப் புற்றுநோயால் தங்கள் உயிரை இழக்கின்றனர்.

8 பெண்களில் ஒருவர் தங்கள் வாழ்நாளில் மார்பகப் புற்றுநோயை எதிர்கொள்வார்.

இனிமேல் எங்களிடமிருந்து ஒவ்வொரு மாதமும் ஒரு இலவச SMS நினைவூட்டலை நீங்கள் பெறலாம்!

நீங்கள் நினைவில் வைத்துக்கொள்வதை நாங்கள் இலகுவாக்கி உள்ளோம். எமது இலவச SMS நினைவூட்டல் சேவைக்காகப் பதிவு செய்யுங்கள். அதன் மூலம், உங்கள் மார்பக சுய பரிசோதனையை மேற்கொள்ள நினைவூட்டும் எளிய செய்தி ஒன்றை ஒவ்வொரு மாதமும் நீங்கள் பெறுவீர்கள்.

முன்கூட்டிய கண்டறிதல் உயிர்களைக் காப்பாற்றும் — சில சமயங்களில் இதற்கு ஒரு சிறிய நினைவூட்டல் மட்டுமே தேவைப்படலாம்.

மார்பகப் புற்றுநோயைத் தடுக்க சிறந்த வழி என்ன?

மார்பக சுய பரிசோதனைகள்

தொடர்ச்சியான சுய பரிசோதனைகள் மாற்றங்களை ஆரம்பத்திலேயே கண்டறிய உதவுகின்றன — மேலும், மார்பகப் புற்றுநோயை வெற்றிகரமாக குணப்படுத்துவதற்கும் உயிர்களைக் காப்பாற்றுவதற்கும் ஆரம்ப கட்டத்திலேயே கண்டறிவதுதான் முக்கியமாகும்.

இலங்கைப் பெண்களிடையே மார்பகப் புற்றுநோய் இன்றும் ஒரு முக்கியமான சுகாதாரப் பிரச்சினையாகவே உள்ளது. அதன் அதிகரிக்கும் பாதிப்பும் (incidence) மற்றும் தாமதமான கட்டங்களில் கண்டறிதலும் (late-stage detection) பிரதான சவால்களாக இருக்கின்றன.

எனவே, முன்கூட்டிய கண்டறிதலைப் பலப்படுத்துதல், இறப்பு விகிதத்தைக் குறைத்தல் மற்றும் அனைத்துப் பெண்களுக்கும் சமமான பராமரிப்பை உறுதி செய்தல் என்பன அவசர முன்னுரிமைகள் ஆகும்.